/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/26_17.jpg)
ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வருபவர், ஆன்டன் இங்குயென். இவர் 'எரிக்' எனப் பெயரிடப்பட்ட கிளியை வீட்டில் செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார்.
சம்பவம் நடந்தன்று வீட்டில் ஆன்டன் இங்குயென் அசந்து உறங்கிக் கொண்டிருக்க, திடீரென தீப்பிடித்துள்ளது. இதனைக் கண்ட அவரது வளர்ப்பு கிளி எரிக், கத்தி கூச்சலிட்டுள்ளது. இதில் திடுக்கிட்டு எழுந்த அவர், கருகிய வாசம் வருவதை உணர்ந்து உடனடியாக எரிக்கை தூக்கிக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அங்கு தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருக்க, அதிர்ச்சியடைந்த ஆன்டன் இங்குயென் தன்னுடைய உடைமைகள் மற்றும் கிளியை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயை அணைத்தனர். தீ பற்றியதற்கான காரணம் குறித்துத் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
தக்க நேரத்தில் கூச்சலிட்டு உரிமையாளரின் உயிரைக் காப்பற்றிய கிளியை, அந்நாட்டு ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டி செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)