அதிபர் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் இலங்கையிலுள்ள வடமேற்கு பதியில் வாக்குச் செலுத்த சென்ற இஸ்லாமிய வாக்காளர்களை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு.

Advertisment

srilanka

கொழும்புவிலிருந்து சுமார் 250 கிமீ தொலைவியில் கடற்கரையை ஒட்டியுள்ள புட்டாளம் எனும் பகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. அவர்கள் வாக்குச் செலுத்த தொலைவில்இருக்கும் ஊரான மன்னாருக்கு 100க்கும் அதிகமான பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டார்கள். இவர்கள் பாதுகாப்பிற்காக உடன் இலங்கை போலிஸும், ஆர்மியும் இருந்துள்ளது.

இருந்தபோதிலும் இவர்களை வாக்கு செலுத்தவிடாமல் தடுக்க, மர்ம நபர்கள் திடீரென சாலையை மறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் டையர்களை எரித்து சாலையை மறித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் பேருந்தில் சென்ற யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, இரண்டு பேருந்துகள் கடுமையாக சேதமடைந்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதே பகுதியில் கற்களை வீசியும் வாக்காளார்களை வாக்குச் செலுத்தவிடாமல் தடுக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.