Advertisment

ஐ.நாவில் பாலஸ்தீன தீர்மானம் வெற்றி; இந்தியாவின் வாக்கு யாருக்கு?

Palestine resolution wins at UN

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

Advertisment

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்தது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சபதம் எடுத்துள்ள இஸ்ரேல் காசாவை நிர்முலமாக்கிகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவையின் அவசர கூட்டம் நேற்று (10-05-24) கூடியது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஐ.நா அவையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பான அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன. மேலும், 25 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. அதிக பெரும்பான்மை ஆதரவின் மூலம், பாலஸ்தீனம் ஐ.நா சபையில் முழு நேர உறுப்பினராக இருக்கவிருக்கிறது.கடந்த மாதம், பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் விட்டோ அதிகாரத்தால் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

resolution palestine israel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe