ஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் டிவி சேனல்... இந்தியாவுக்கு வாழ்த்து செய்தி ஒளிபரப்பு...

pakistans dawn news broadcasted wishes for india

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல செய்தி தொலைக்காட்சி ஹேக் செய்யப்பட்டு, அதில் இந்தியச் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான செய்தி ஒளிபரப்பப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னணி செய்தி நிறுவனமான 'டான்' எனும் தொலைக்காட்சியில் நேற்று விளம்பரம் ஒளிபரப்பப்பட்ட சமயத்தில், திடீரென திரையில் இந்தியாவின் தேசியக்கொடி தோன்றியதோடு, இந்தியாவுக்குச் சுதந்திர தின வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான வாசகங்களும் ஒளிபரப்பாகியது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக, 'டான்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe