Advertisment

இந்திய தேசிய கீதத்தை பாடிய பாகிஸ்தானியர்கள்...

pakistan

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ஆசிய முதல் சுற்று போட்டியில் இந்திய தேசிய கீதத்தை பாடிய பாகிஸ்தானியர்கள் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

ஐக்கிய அமீரகத்தில் ஆசிய கிரிக்கிட் கோப்பை நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்விளையாட்டின் சூப்பர் 4 லீக ஆட்டம் நேற்று துவங்கியது. அதில் ஒரு போட்டியில் இந்தியாவும், மற்றொரு போட்டியில் பாகிஸ்தானும் வெற்றிபெற்றது. இந்த போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிய கிரிக்கெட் கோப்பையின் முதல் கட்ட லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் ஒரு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் 15 மாதங்கள் கழித்து நேருக்கு நேராக மோதிக்கொண்டது.

Advertisment

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு இரண்டு நாடுகளின் தேசிய கீதமும் ஒலிப்பது வழக்கம். அப்படி இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்கும்போது பாகிஸ்தானிய மக்கள் எழுந்து நின்று, இந்திய தேசிய கீதத்தை பாடி நட்புபாராட்டினர். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்தியர்கள் பலர் இதை விரும்பி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அன்று நடந்த போட்டியில் இந்தியாவும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

India Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe