ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்ச்சியாக ஆபரேஷன் கங்கா மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஷஃபிக் என்ற பெண் இந்திய தூதரகத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "என் பெயர் அஸ்மா ஷஃபிக். நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். நெருக்கடியான நேரத்தில் இங்கு சிக்கியுள்ள எங்களுக்கு எல்லா வகையிலும் உதவிவரும் இந்திய தூதரகத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய பிரதமருக்கும் நன்றி. இந்திய தூதரகம் மூலமாக நாங்கள் பாதுகாப்பாக வீடு செல்கிறோம் என நம்புகிறேன்" எனப் பேசியுள்ளார்.