style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாகிஸ்தானில் ஜூலை 25-ஆம் தேதிநாடாளுமன்ற தேர்தலும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில்நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின்தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிகஇடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர்இம்ரான்கான் வரும் 11-ஆம் தேதி பிரதமராகபதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் இந்தியாவிலுள்ள பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்வீரர் கபிலதேவ்,சுனில் கவாஸ்கர், பாலிவூட் நடிகர் அமீர்கான் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதபோல் இந்த பதவியேற்பு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைப்பது தொடர்பாக பிடிபி கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் மோடி ஒருவேளை அந்த அழைப்பை நிராகரித்தால் அது பாகிஸ்தானுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.