பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நூர் மெஸ்கன்சாய் மர்ம நபர்களால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி முஹம்மது நூர் மெஸ்கன்சாய் நேற்று பலுசிஸ்தானில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போழுது பயங்கரவாதிகளால் அவர் சுடப்பட்டார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருந்தும் நீதிபதி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதியின் மறைவு மாகாண மக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் நீதிபதி சுடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.