பாகிஸ்தானில் தக்காளியின் விலை உயர்வை எடுத்துச் சொல்லும் வகையில் மணப்பெண் ஒருவர் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளியை அணிந்து கொண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் மாநிலம் லாகூர் நகரில் நடைபெற்ற திருமண விழாவில் மணப்பெண் தன்னுடைய நெற்றி, கைகளில் தக்காளி பழங்களை ஆபரணங்களாக உடுத்திக்கொண்டு மணமேடையில் அமர்ந்திருந்தார்.

j

Advertisment

அதுபோல ஒட்டியானம், செயின் ஆகியவற்றிற்கு பதிலாக தக்காளிகளான மாலைகளை அணிவித்திருந்தார். இதுகுறித்து அந்த மணப்பெண் கூறும்போது, " பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்களிடத்தில் தக்காளிக்கு தங்கத்தை போல மதிப்பு கூடியுள்ளது. அதனால் என்னுடைய திருமணத்திற்கு தங்க நகைக்கு பதிலாக தக்காளியை பயன்படுத்த விரும்பினேன்" என்றார்.