Advertisment

'எங்களுக்கும் மோடி போன்று பிரதமர் வேண்டும்' - பாகிஸ்தான் இளைஞர் விருப்பம் 

pakistan youth likes modi government viral video

Advertisment

பாகிஸ்தான் அரசியலில் நிச்சயமற்றத்தன்மை, குறைவான அந்நிய செலாவணி கையிருப்பு எனப் பல்வேறு காரணங்களால்அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால் பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானைசேர்ந்த செய்தியாளர் சனா அஜ்மத் என்பவர் பாகிஸ்தானைசேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பாகிஸ்தான் பிரதமரின் ஆட்சி குறித்துகேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அப்போது பேசிய அந்த இளைஞர், "இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்திருக்கக்கூடாது. இரு நாடுகளும் பிரியாமல் ஒன்றாகவே இருந்திருந்தால் தேவையான அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி என் குழந்தைகளுக்கு கொடுத்திருப்பேன். பாகிஸ்தான் பிரதமரின்ஆட்சியை விட மோடியின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது. மோடி பாகிஸ்தானுக்கு பிரதமராக கிடைத்திருந்தால் தற்போது உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார்" எனத்தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

modi Pakistan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe