ADVERTISEMENT

கடும் வேலையில்லா திண்டாட்டம் - 1.5 மில்லியன் பேர் பியூன் வேலைக்கு விண்ணப்பம்!

04:23 PM Sep 28, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாகிஸ்தானில் பியூன் வேலைக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொறுப்பில் இருந்து வருகிறது. வேலை வாய்ப்பு, பொருளாதார பிரச்சனைகளை ஆளும் அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. தீவிரவாதிகளால் ஏற்படும் பிரச்சனைகள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் ஸ்திரத் தன்மையற்ற நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது.

பாகிஸ்தானில் இதுவரை படித்த இளைஞர்கள் 24 சதவீத பேர் வேலை இல்லாமல் இருந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை அதிக அளவு உள்ளதால் வெளிநாடுகளுக்குச் செல்ல அந்நாட்டு இளைஞர்கள் பெருமளவு முயன்று வருகிறார்கள். குறிப்பாக கர்த்தார், ஏமன், குவைத் போன்ற நாடுகளில் நல்ல சம்பளம் கிடைப்பதாலும், பாகிஸ்தான் இளைஞர்களுக்கு அந்நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பதாலும் இளைஞர் அங்குச் செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க பியூன் வேலை ஒன்றுக்கு 1.5 மில்லியன் இளைஞர் அரசு தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்துள்ள சம்பவம் அந்நாட்டில் வேலை வாய்ப்பு பிரச்சனை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT