பாகிஸ்தானை சேர்ந்த முன்னணி பாடகியான ராபி பிர்ஸாடா சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டில் அனுமதியின்றி பாம்புகளை வளர்த்ததால் பாகிஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முன்னதாக இந்திய பிரதமர் மோடியை, தன்னிடம் இருக்கும் பாம்புகளை விட்டு கொத்தவிடுவதாகக் கூறியதால், பெரும் கண்டனத்துக்கு ஆளானவர். அப்போது பாம்புடன் புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் பிரபலமான ராபி பிர்ஸாடா இம்முறை இன்னும் அதிரவைத்துள்ளார்.

Advertisment

f

இந்த முறை அவர் உடல் முழுவதும் சுற்றப்பட்ட வெடிகுண்டுகளுடன் மோடிக்கு எதிரான வாசகங்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். ஆனால் ட்விட்டர் வாசிகளோ, உடல் முழுவதும் சுற்றபட்டு இருக்கும் வெடிகுண்டுகளை அவர்களின் தேசிய ஆடை என்றும், சிலர் ஹேப்பி தீபாவளி என்றும் கமெண்டுகளை கொடுத்து வறுத்தெடுத்து வருகின்றனர்.