பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அன்றாட குடும்ப செலவுக்கு, அவரது வங்கிக்கணக்கிலிருந்து பணமெடுக்க அனுமதி தர வேண்டும் என பாகிஸ்தான் அரசு ஐநா சபையிடம் கோரிக்கை வைத்துள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக விளங்கிய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் மீது பொருளாதார தடை விதித்துள்ளது ஐநா சபை. இந்த தடை காரணமாக ஹபீஸ் சயீத்தால் வங்கி கணக்கிலிருந்து பணபரிமாற்றங்கள் செய்ய முடியாது. மேலும் ஹபீஸ் சயீத் தொடர்பான வங்கி கணக்குகளை யு.என்.எஸ்.சி குழு தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கும். இந்த நிலையில் ஹபீஸ் சயீத்திற்கும், அவனது குடும்பத்திற்கும் பணத்தேவை இருப்பதால், ஹபீஸ் சயீத் வங்கி கணக்கிலிருந்து பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 1.5 லட்சம் எடுக்க விலக்கு அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு கோரி உள்ளது.