Advertisment

ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்த பாகிஸ்தான்... காரணம்..?

மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் கடந்த மாதம் லாகூரில் கைது செய்தது.

Advertisment

hafiz

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் 28 வரை மும்பையின் 12 இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 150 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான். மேலும் ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்நிலையில் பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருந்த தீவிரவாத இயக்கத் தலைவன் ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இம்ரான் கான் இந்தியாவை எச்சரித்திருந்த நிலையில், தற்போது ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisment

hafiz Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe