Skip to main content

தண்ணீர் தடைசெய்யப்பட்டால் கவலைப்பட மாட்டோம், ஆனால்...- பாகிஸ்தான்

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 

ghgfhgfhhg

 

இந்தியாவில் இருந்து சிந்து நதி நீரானது பாகிஸ்தானுக்கு செல்கிறது. இந்நிலையில் புல்வாமாம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் இடையே போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தப்படி, ஜீலம், செனாப், சிந்து ஆகிய 3 நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக்கடலில் கலக்கும் சிந்து நதியின் 80 சதவீதம் நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இப்படி இருக்கும்போது பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3 நதிகளின் நீரையும் புதிய அணை மூலம் யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்திருப்பதாக நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதற்காக ராவி ஆற்றின் குறுக்கே சாபூர் - காண்டி இடையே அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கவாஜா சுமெயில் கூறுகையில், 'கிழக்குநோக்கி பாகிஸ்தானுக்குள் பாயும் பியாஸ், ராவி, சட்லஜ் நதிகளை இந்தியா தடுத்து நிறுத்தினாலும் சரி, அல்லது மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் வேறு பக்கம் திருப்பினாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். ஆனால் மேற்கு நோக்கிப் பாயும் சீனப், சிந்து, ஜீலம் நதிநீரை தடுத்தால், வேறுபக்கம் திருப்பினால், நிச்சயம் எங்களுடைய கவலைகளை, எதிர்ப்பைத் தெரிவிப்போம் " எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்