Advertisment

பாகிஸ்தான் வீரருக்கு உதவ முன்வந்த இந்திய மருத்துவமனை!

பாகிஸ்தானின் முன்னாள் ஹாக்கி வீரர்மன்சூர் அஹமத்(49). இவர்தற்போது இதயக்கோளாறுகாரணமாககராச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவிற்குஎதிராக பலஆட்டங்களில்சிறப்பாகவிளையாடியுள்ளார். 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இந்திரா காந்தி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் அது மட்டுமல்லாமல் 1994ஆம் சிட்னியில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பையில் கோல் கீப்பர் என்கிற முறையில் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்தவர். பாகிஸ்தான் பஞ்சாப் மாநில முதல்வர் இவரின் சிகிச்சைக்கு ஒரு லட்சம் டாலர் நிதி அளித்தார். பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி தனது அறக்கட்டளை மூலம் நிதி அளித்துள்ளார்.

Advertisment

pakisatan palyer

தற்போது இவரின் இதய மாற்றுஅறுவை சிகிச்சையை இலவசமாக செய்ய இந்திய மருத்துவமனையான ஃபோர்டிஸ் மருத்துவ குழுமம் முன்வந்துள்ளது. இவர் சிகிச்சை பெற விசா கேட்டுஇந்திய அரசிடம் விண்ணப்பித்தார். இந்திய அரசும் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விசா வழங்க ஒப்புக்கொண்டது. இதுகுறித்து வெள்ளிக்கிழமைஃபோர்டிஸ் மும்பை மண்டல மருத்துவர் எஸ்.நாராயணி, "இந்தியாவுக்கு எதிராக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர் மன்சூர் அகமத். அவருக்கு மும்பையில் அல்லது சென்னையில்தான் அறுவைசிகிச்சை நடைபெறும். அவர் வந்த பிறகுதான் அந்த முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார்.

pakistan hockey team India hockey Pakistan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe