பாகிஸ்தானின் சிறைகளில் சிக்கியுள்ள இந்திய மீனவர்கள் 360 பேரை விடுதலை செய்யப்போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாகிஸ்தான் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Advertisment

pakistan palns to release 360 indian fishermen jailed in pakistan

இந்நிலையில் தற்போது அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதில் முதல் கட்டமாக ஏப்ரல் 7 ஆம் தேதியிலிருந்து 4 பிரிவுகளாக விடுதலை செய்யப்பட உள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7 முதல்கட்டமாக 100 மீனவர்கள் வாகா எல்லைக்கு அழைத்துவரப்பட்டு இந்தியா வசம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 கட்டங்களாக ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் 360 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.