இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆகியோர் 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

Advertisment

pakistan most googled in 2019 list

கூகுளில் 2019 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நபர்கள், அதிகம் பேசப்பட்ட விஷயங்கள் குறித்த பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தானில் யாரை பற்றி அங்குள்ள மக்கள்அதிகளவு கூகுளில் தேடியுள்ளனர் என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதிகம் தேடப்பட்டோர் பட்டியலில் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆறாவது இடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன் அந்த பட்டியலில் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் விமானப்படைக்கு இடையிலான சண்டையின்போது இந்திய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த எஃப் -16 என்ற பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அவர், பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தானியர்களிடம் சிக்கினார். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு திரும்பினார். எனவே இவரை பற்றி பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் தேடியுள்ளனர்.