பாகிஸ்தானில் வழக்கமாக மொஹரம் பண்டிகை நாட்களில் பால், காய்கறிகள், இறைச்சி போன்றவற்றின் விலை உயருமாம். அந்த வகையில் பாகிஸ்தானில் மொஹரம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நேரத்தில் பாகிஸ்தானில் காய்கறி போன்ற பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகரான கராச்சி, சிந்த், இஸ்லாமாபாத் போன்ற நகரங்களில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ. 120 ல் இருந்து ரூ. 140 வரை விற்கப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து பாகிஸ்தான் பொதுமக்கள் கூறுகையில், 'இப்போதைய நேரத்தில் பாலின் வரத்து குறைந்துள்ளது. இவ்வளவு அதிகமாகப் பால் விலை செல்லும் எனக் கனவில்கூட நினைக்கவில்லை. குழந்தைகளுக்குப் பால் கண்டிப்பாகத் தேவைப் படுகிறது. அதனால் எவ்வளவு விற்றாலும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்' என்கின்றனர்.

Advertisment