Advertisment

பொய் செய்தி பரப்பி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான்...

hgjhgvjv

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது.

Advertisment

இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த எப் 16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் பயணம் செய்த விமானி பார்ச்சூட் உதவியுடன் குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வான்படையின் விமானத்தை பாகிஸ்தான் படையினர் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தி சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் பிரத்தியேக காட்சி என்ற பெயரில் கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் விபத்துக்குள்ளான விமானத்தின் படங்களையும், விடீயோக்களையும் காட்டி வருகிறது. இது தற்போது சமூகவலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை இல்லை என இந்திய விமானப்படை வட்டாரத்தில் தகவல் கூறப்பட்டுள்ளது.

Pakistan surgical strike pulwama attack
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe