pakistan man with three wives searches for fourth one

மூன்று மனைவிகளுடன் வாழ்ந்துவரும் 20 வயது இளைஞர் ஒருவர் நான்காவது திருமணதிற்குப் பெண் பார்த்துவரும் சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

Advertisment

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் வசித்துவரும் 20 வயது இளைஞர் அட்னான். இவருக்கு இதுவரை மூன்று திருமணங்கள் நடந்து தன்னுடைய மூன்று மனைவிகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார். அட்னான் தனது 16 வயதில் மாணவராக இருக்கும்போது முதல் திருமணத்தைச் செய்துகொண்டுள்ளார். அதன்பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது திருமணமும், கடந்த ஆண்டு மூன்றாவது திருமணமும் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது நான்காவது திருமணத்திற்குப்பெண் பார்த்து வருகிறார் அட்னான். அதுவும் தனது முதல் மூன்று மனைவிகளின் உதவியோடு அவர் இதனைச் செய்து வருகிறார்.

Advertisment

தனக்கு நடக்கும் பெண்பார்க்கும் படலம் குறித்து பத்திரிகை ஒன்றிடம் பேசியுள்ள அட்னான், "மூன்று மனைவிகளும் இணைந்து எனது நான்காவது திருமணத்திற்குப் பெண் பார்த்து வருகின்றனர். எனக்குக் குடும்பம் நடத்துவதற்கு மாதம் ரூ.1 முதல் 1.5 லட்சம் வரை செலவு ஆகிறது. நான் முதல் திருமணம் செய்துகொண்டபோது எனக்கு 16 வயது. ஒவ்வொரு திருமணத்திலும் எனது நிதி நிலை மேம்பட்டு வந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது மூன்று மனைவிகளின் பெயரும் 'S' என்ற எழுத்தில் தொடங்குவதால் நான்காவது மனைவியின் பெயரும் 'S' என்ற எழுத்தில் தொடங்குவது போலப் பெண் பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.