/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pak-ni.jpg)
பாகிஸ்தான் மசூதி அருகே ஏற்பட்ட திடீர் குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்லாமியப்பண்டிகையான மிலாது நபிநேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், பாகிஸ்தான் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாது நபியைக் கொண்டாடும் வகையில் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.அப்போது, திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 130 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.காயமடைந்த நபர்களைக் காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
மேலும், இது தற்கொலைப் படை தாக்குதல் என முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அங்குள்ள அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனத்தைத்தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)