imran ali

Advertisment

பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த குற்றவாளியைப் தீர்ப்பு வழங்கிய அடுத்த 24 மணிநேரத்திற்குள் தூக்கிலிட பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானிலுள்ள கசுர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த குற்றவாளி இம்ரான் அலி கைது செய்யப்பட்டார். இவர் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். இவ்வழக்கில் லாகூர் நீதிமன்றம் அக்டோபர் 17ஆம் தேதி தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இவர் ஒன்பது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட ஐந்து வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து சிறுமியின் தந்தை இவரை பொது இடத்தில் வைத்து தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நேற்று நடந்த இவ்வழக்கில் பொதுஇடத்தில் தூக்கிலிட முடியாது என்று அதை தள்ளுபடி செய்தார். இன்று காலை ஆறு மணிக்கு சிறையில் வைத்தே இவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.