Advertisment

இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்...

gurunanak

Advertisment

காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இந்தியாவோ பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் சாத்தியப்படாது என்று இந்த பேச்சுவார்த்தை அழைப்பை இந்தியா மறுத்துவிட்டது.

இந்நிலையில், சீக்கியர்களின் புனித தளமான கர்தார்புர் குருதுவாராவுக்கான அனுமதி வழங்குவதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இந்தியா பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவிப்பதால், தற்போது இந்தியா பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் கர்தார்புர் குருதுவாரா திறக்கப்படாது என்று பாகிஸ்தான் இந்தியாவை மிரட்டியுள்ளது.

India Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe