Pakistan former Prime Minister Imran Khan sentenced to 3 years in prison

கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான்முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

இம்ரான்கான் பிரதமராக இருந்த போது தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்ததாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், தற்போது இம்ரான்கான் குற்றவாளி என்று கூறி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது. மேலும் உடனடியாக இம்ரான் கானை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

இம்ரான்கானுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி பதவியை இழக்கிறார். அத்தோடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும்போட்டியிட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இம்ரான்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.