isaq dar

Advertisment

கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த நவாஸ் ஷெரிப், கருப்பு பணம் மூலம் லண்டனில் சொத்துக்களை சேர்த்துள்ளார் என்று பனாமா பேப்பர் வெளியிட்டது. இதனை அடுத்து நவாஸ் ஷெரிப்பின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டு, சிறை தண்டனை வழங்கப்பட்டது. தற்போது அதை ரத்து செய்துள்ளது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்.

இவரைபோன்றே இவரது சம்மந்தியமும் நிதியமைச்சருமான இசாக் தர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், லண்டனில் இசாக் தர் பதுங்கினார். இதையடுத்து பாகிஸ்தானின் தேடப்படும் குற்றவாளியாக இசாக் தரை அறிவித்தது நீதிமன்றம்.

Advertisment

இந்நிலையில், இசாக்கு சொந்தமான ரூ.87 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது பாகிஸ்தானின் பொறுப்புடமை நீதிமன்றம். இந்நிலையில் முடக்ப்பட்ட இந்த சொத்துக்களை ஏலம் விடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.