பாகிஸ்தானில் நேற்று (ஜூலை-25)நாடாளுமன்ற தேர்தலும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.ஆனால் தேர்தல் முடிவுகள் சில தொகுதிகளில் வெற்று காகிதங்களில் எழுதப்பட்டுவேட்பாளர்களுக்குகொடுக்கப்பட்டதால் எதிர்ப்பு நிலவியது.

கடந்த ஜூலை 14-ஆம் தேதியேபாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் பலுகிஸ்தானில் அவாமி கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு கூட்டத்தில் புகுந்த மனித வெடிகுண்டு வெடித்து 70 பேர் சம்பவ இடத்தியிலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில்54 பேர் தொடர்ந்து பலியாகி பலி எண்ணிக்கை 124 ஆக இருந்தது. இறுதியில் பலி எண்ணிக்கை 133-ஐ தொட்டது இப்படி தேர்தலுக்கு முன்னரே பல தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்று பரபரப்பாக்கியது.

Advertisment

pak

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதன் காரணமாக சுமார் 85 ஆயிரம் வாக்கு சாவடிகளில் மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பாகிஸ்தானில் தேர்தல் பாதுகாப்பிற்காக இவ்வளவு அதிக ராணுவ வீர்கள் குவிட்கப்பட்டது இதுதான் முதல்முறை இவ்வளவு பாதுகாப்பிற்கு பிறகும்பலுசிஸ்த்தான் வாக்குச்சாவடியில் தேர்தல் வாக்கெடுப்பின் பொழுதுநிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 25 பேர் பலியாகி 30க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த நிலையில், மொத்தம் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதிளுக்கும்தேர்தல் முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில் ஏற்பட்டதொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்தல் முடிவுகள்வெளியிடுவது தாமதமானது. பிறகு வெளியிடப்பட்ட முடிவுகளில்தொடர்ந்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. அக்கட்சி 119 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 56 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

பாகிஸ்தானில் உள்ளதேர்தல் ஆணைய விதிகளின்படி தேர்தல் முடிவுகளை படிவம் 45-ல் வெளியிட வேண்டும். ஆனால், பாகிஸ்தானின் கிமற்றும் ஐதராபாத் தொகுதிகளில் நடந்த தேர்தல் முடிவுகளை வெற்று காகிதம் ஒன்றில் கைப்பட எழுதி அதிகாரிகள் தந்துள்ளனர். இதனால் பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியே ஆட்சிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.