Pakistan court upholds sentenced for Late Musharraf's appeal

20 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஷ் ஷெரிப்பின் ஆட்சியைக் கலைத்து பாகிஸ்தான் அதிபராகபர்வேஸ் முஷாரப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அதன் ஒரு பகுதியாக நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை அவர் முடக்கினார்.

Advertisment

இதன் பின்னர், கடந்த 2013ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த நவாப் ஷெரிப், முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில ஆண்டுகளாகப் பாகிஸ்தான் நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது. மேலும், இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக எனக் கூறி, முஷரப் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு சென்றார். அதன் பின்னர் அவர் அங்கேயேதங்கிவிட்டார்.

Advertisment

இந்த சூழலில், கடந்த 2019 ஆம் ஆண்டில் தேசத்துரோக வழக்கில் சிக்கிய முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து, இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் பிரதமர் முஷரப் தரப்பில் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, முஷரப்பின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி முஷரப் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையில், முஷரப்பின் மேல்முறையீட்டு மனு பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நேற்று (10-01-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முஷரப்பின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.

Advertisment