Pakistan is again in trouble for the second time

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது.

Advertisment

இந்நிலையில் இரண்டாவது முறையாகபாகிஸ்தான் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு கடந்த மூன்றாம் தேதி அன்று இதேபோல் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி இருந்தது. இந்நிலையில் இன்றும் இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.