பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு பதவியில் இருந்து வருகின்றது. இந்த அமைச்சரவையில், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சராக பதவியில் இருப்பவர் பாவத். இவரையும், அந்நாட்டில் புகழ் பெற்ற டிக்டாக் பெண் பிரபலம் ஹரீம் ஷா என்பவரையும் இணைத்து பாகிஸ்தானில் உள்ள புகழ் பெற்ற டிவி சேனல் ஒன்று இணைத்து செய்தி வெளியிட்டு இருந்தது.

Advertisment

இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர், அந்த சேனல் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற அமைச்சர், அவரை பற்றிய தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படும் தொகுப்பாளரை தற்செயலாக சந்தித்துள்ளார். அவரை கண்டதும் கோபம் கொண்ட அவர், அவருடைய கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisment