Advertisment

ஆஸ்கர் சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் பிராட் பிட்!

ஆண்டுதோறும் ஹாலிவுட் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தொகுப்பாளர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஜோக்கர், பாராசைட் உள்ளிட்ட 9 படங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

oscar-awards

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல் ஆஸ்கர் விருதினை பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டிச் சென்றார். "ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்" எனும் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிராட் பிட்டுக்கு 'சிறந்த துணை நடிகர்' எனும் பிரிவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, சிறந்த துணை நடிகைக்கான விருதை 'மேரேஜ் ஸ்டோரி' எனும் படத்தில் நடித்த லாரா டெர்ன் பெற்றார். சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'லிட்டில் வுமன்' திரைப்படத்தில் பணியாற்றியதற்காக ஜாக்குலின் டர்ரன் பெற்றார்.

சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது ஜோக்கர் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது; விருதை ஹில்டர் பெற்றுக்கொண்டார்.சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் பட நாயகன், நடிகர் வாக்கீன் பீனிக்ஸ் பெற்றார்.ஆஸ்கர் விருதுக்கு 4 ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்ட வாக்கீன் பீனிக்ஸ், முதல்முறையாக விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

oscar awards
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe