ADVERTISEMENT

கொரோனா வைரஸ் தாக்கிய பெண்ணுக்கு பிறந்த குழந்தை - மருத்துவர்கள் விளக்கம்!

09:36 PM Feb 11, 2020 | suthakar@nakkh…


சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


ADVERTISEMENT


ஆனால் உலக நாடுகளில் சில உயிரிழப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1016 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண் ஒருவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை நல்ல முறையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தி சீன மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT