ADVERTISEMENT

"இந்தியாவிடம் பெற்ற கடன் தவறாக செலவழிப்பு"- இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

06:10 PM Mar 23, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா அளித்த கடனுதவியை இலங்கை அரசு தவறான வழியில் பயன்படுத்துவதாக, அந்நாட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கை நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, "இந்தியா வழங்கிய பணத்தைக் கொண்டு அரசியல் ஆதாயம் அடையும் வகையில், 14,000 கிராமங்களில் கடைகள் அமைத்து வருகிறது இலங்கை அரசு. உணவகங்களிலும், பெட்ரோல் பங்க்குகளிலும் நீண்ட வரிசையில் நிற்கும் மக்களுக்கு பலன் தரும் வகையில் தான், அப்பணம் செலவழிக்கப்பட்டியிருக்க வேண்டும். மேலும், கடனுதவி விவகாரத்தில் இந்தியாவுடன் இலங்கை அரசு சில ரகசிய உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து, இலங்கை அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்" என்று இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.

அந்நிய செலாவணி பற்றாக்குறைக் காரணமாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு, இந்தியா கடந்த வாரம் 7,500 கோடி ரூபாய் கடனுதவி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT