Skip to main content

கிலோ 260 ரூபாய்... உலக நாடுகளை வதைக்கும் வெங்காயம்..!


வெங்காயத்தின் விலை இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகின்றது. சில வாரங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை ரூ.200-க்கும் அதிகமாக சென்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். பல இடங்களில் வெங்காயம் தட்டுப்பாடு நிலவியது. சில இடங்களில் வெங்காய குடோன்களில் திருட்டு சம்பவங்களும் நடைபெற்றன.



இந்தியாவில் வெங்காயத்தால் இத்தகைய தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், தற்போது மலேசியாவிலும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கடந்த சில தினங்களாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 மலேசிய ரிங்கிட் என்ற அளவில் விற்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 260 என்று விற்கப்படுகின்றது. உலக நாடுகளை வெங்காயம் ஆட்டி படைக்கும் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !