Omicron PA 4.6 strain virus spread in Britain!

கரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து மீண்டெழுந்து வரும் சூழலில் அமெரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானின் புதிய வகை திரிபு வைரஸ் பிரிட்டனிலும் பரவி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு முகமை கரோனா திரிபு தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி அந்த வாரத்திலிருந்து கரோனா பாதிக்கப்பட்டவர்களின் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 3.3 சதவீதம் பேருக்கு பிஏ 4.6 என்ற உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானின் புதிய வகை திரிபு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை திரிபு வைரஸ் உலகத்தில் உள்ள பலநாடுகளில்கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில்,இந்த வகை ஒமைக்ரானால் மக்கள் அச்சமடை தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை துறையைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.