மஹாராஷ்டிரா மாநிலம் பூனேவைச் சேர்ந்த சாகர் காலே என்பவர், பணிநிமித்தமாக மும்பைக்கு டெக்கன் குயின் ரயிலில் மும்பைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மும்பையில் இருந்து திரும்பியபோது சாப்பிடுவதற்காக ஆம்ப்லேட் ஒன்று ஆர்டர் செய்துள்ளார்.

gh

ஆம்லேட்டை சாப்பிடும்போது அதில் புழுக்கள் இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார் காலே. இதுகுறித்து அவர் உணவை கொண்டு வந்தவரிடம் கூற, அவருக்கு உடனடியாக வேறு ஆம்லேட் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 18 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலே, இது குறித்த புகாரை கடந்த இரு நாட்களுக்கு முன்பு தான் ரயில்வே நிர்வாகத்திடம் அளித்துள்ளார்.

gh

Advertisment

இது குறித்து ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா மையத்தின் துணை மேலாளர் ஜி.வி.சென்னா கூறுகையில், காலேவிடமிருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. இதனை நாங்கள் ஐ.ஆர்.சி.டி,சியின் தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளோம். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ரயிலில் பயணித்த பலரும், ரயிலில் பறிமாறப்படும் உணவுகள் தரமானதாக இல்லை என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.