Skip to main content

கேக் சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட பெண் பலி... வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

Published on 27/01/2020 | Edited on 28/01/2020


ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட பெண் வலிப்பு வந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சில தினங்களுக்கு முன்பு தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அரசு பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.



இதற்காக கடற்கரையை ஒட்டியுள்ள மிகப்பெரிய விடுதியான லாமிங்டனில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதன் ஒரு கட்டமாக கேக் உண்ணும் போட்டி நடைபெற்றது. இதல் 60 வயதான பெண் ஒருவர் கலந்துகொண்டு கேக் சாட்டபிட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கேக் சாப்பிடும் போதே அவருக்கு வலிப்பு வந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளத்தில் 2000 பேர் பலி; சர்வதேச உதவியைக் கோரும் லிபியா

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Libya appeals for international aid for 2000 people died in the flood

 

வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்க நிலப்பரப்பின் அடிப்படையில் 4வது நாடாக இருந்தாலும், இங்கு வாழும் மக்களின்  எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-09-23) டேனியல் புயல் தாக்கியது. குறிப்பாக லிபியாவின் கிழக்கு பகுதிகளைக் கடும் புயல் மற்றும் மழை தாக்கியுள்ளது. இதனால், டெர்னா, பெங்காஸி, பெடா உள்ளிட்ட பல பகுதிகளில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

கனமழை காரணமாக டெர்னா பகுதியில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்துள்ளன. சில அணைகள் இடிந்தும் விழுந்துள்ளன. இந்த வெள்ளத்தில் குறைந்தது 2000 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் இதில் மாயமாகி இருக்கலாம், எனவே அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

இப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்டவை தடைப்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. கிழக்கு லிபியாவில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்களும் வெளியாகி வருகிறது. வெள்ளம் பாதித்த டெர்னா நகரைப் பேரழிவு மண்டலமாக அந்நாட்டுப் பிரதமர் ஹமாட் அறிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் உள்ள கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடவும் உத்தரவிட்டுள்ளார். 

 

பாதிப்பு மிக மோசமாக இருக்கும் பகுதியான கிழக்கு சிரேனைக்கா மாகாணத்தில் மூன்று பகுதிகளை வெள்ளம் காரணமாக பேரழிவுப் பகுதியாக அறிவித்து சர்வதேச உதவியைக் கோரியுள்ளதாக லிபியா ஜனாதிபதி கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, லிபியா பிரசிடென்சி கவுன்சிலின் தலைவர் மொஹமட் மென்ஃபி, வெள்ளத்தால் ஏற்பட்ட பரவலான பேரழிவைச் சமாளிக்க சர்வதேச உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர், "சகோதர மற்றும் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

 

 

Next Story

பாதுகாவலரின் மடியிலேயே உயிரைவிட்ட பிரபலமான மனித குரங்கு!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Gorilla dead in the lap of the defender

 

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, கொரில்லா வகை குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆயுதம் ஏந்திய படையினரால் கொல்லப்பட்ட தன்னுடைய தாயின் உடலைவிட்டு நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்த நடாகாஷியை இரண்டு மாத குட்டியாக விருங்கா வனத்துறையினர் மீட்டு கொண்டு வந்தனர். அன்றைய பொழுதியில் இருந்து 14 வருடங்கள் நடாகாஷியை மேத்யூ ஷவாமு பராமரித்து வந்தார்.

 

காங்கோ நாட்டில் அமைந்துள்ள விருங்கா தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்ததது ஆதரவற்ற கொரில்லாவான நடாகாஷி  மற்றும் மடாபிஷி. இங்கு வனத்துறை ஊழியராக பணியாற்றும் மேத்யூ ஷவாமு, என்பவர் கொரில்லாக்கள் குட்டிகளாக இருக்கும்போதே அவற்றுடன் விதவிதமாக ‘செல்ஃபி’ எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மேத்யூ ஷவாமு அந்த கொரில்லாக்களுடன் எடுத்த ‘செல்ஃபி’ படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த படம் உலகம் முழுவதும் வேகமாக வைரலானது. எப்போதும் தன்னுடைய பாதுகாவலருடனே இருக்கும் நடாகாஷி தொடர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த கொரில்லா நடாகாஷி, தனது பாதுகாவலர் மேத்யூ ஷவாமு மடியிலேயே உயிரிழந்தது.