அமெரிக்காவில் நேற்று முன்தினம் வங்கி ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர் முதியவர் அங்கிருந்தவர்களை மிரட்டி பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். கொள்ளையடித்து சென்றவர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மேடான பகுதியில் நின்று பணத்தை வாரி இறைத்து ஹேப்பி கிருஸ்துமஸ் என்று உரக்க கத்தியுள்ளார்.

Advertisment

வங்கியில் பணத்தை கொள்ளையடித்தவர் இவர்தான் என்று கண்டுபிடித்த வங்கி ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் மக்களுக்கு கிருஸ்துமஸ் பரிசு கொடுப்பதற்காகவே வங்கியில் கொள்ளை அடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.