சூரியனின் வயதையும், பூமியின் வயதையும் கண்டுபிடித்துள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பல உயிரிங்கள் தோன்றிய ஆண்டுகளையும் வகைப்படுத்தி கூறி வருகிறார்கள். இன்னும் பூமியில் இருந்து கிடைக்கும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளைத் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், சைபீரியா நாட்டில் உள்ள , பனிக்கட்டி உறைவிடத்தில் சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்வாழ்ந்த ஒரு நாயின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த நாயின் உடல் உறைந்த பனியில் முற்றிலும் பாதுகாக்கப்பட்டதாக இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த உலகில் கண்டெடுக்கப்பட்ட அதிக வயதுள்ள நாய்களில் இதுதான் மிக மூத்த வயதுடைய நாய் என தெரிவித்துள்ளனர்.