Advertisment

சிவப்பு நிறமாக மாறிய ஆறு... வெளியான அதிர்ச்சி காரணம்!

jk

Advertisment

எண்ணெய் கசிவு காரணமாக ரஷ்யாவில் ஆறு ஒன்று சிவப்பு நிறமாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் சைபீரியா மாகாணத்தில் மிகப்பெரிய மின் நிலையம் ஒன்று செயல்படுகின்றது. சில தினங்களுக்கு முன் அங்குள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 20,000 டன் எண்ணெய் அருகில் இருந்த அம்பர்ன்யா நதியில் கலந்துள்ளது.

இந்த எண்ணெய் கசிவு சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றை மாசு படுத்தியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு பிறகே இந்த எண்ணெய் கசிவை அதிகாரிகள் தற்போதுகண்டறிந்து, அதனை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றுநீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதுதுறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், "அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. எண்ணெய் கசிவை சீக்கிரம் கண்டுபிடித்திருந்தால் ஆறு முழுவதும் மாசடைவதில் இருந்து பாதுகாத்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

viladimir putin Russia rivers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe