மெரிக்காவின் ஓஹியோவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எல் பஸோ (EL PASO) எனும் இடத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் இன்று காலை நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலியாகினார். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் பலியான நிலையில், 24 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதலை நடத்திய நபரும் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.