Skip to main content

நீச்சல் குளத்தில் குளித்தால் கர்ப்பமாக வாய்ப்பு..? சர்ச்சை கருத்தால் சிக்கலில் அதிகாரி!

Published on 28/02/2020 | Edited on 29/02/2020

ஆண்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் பெண்கள் குளித்தால் கர்ப்பமாக வாய்ப்பு உள்ளதாக பெண் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் சிட்டி ஹிக்மாவாட்டெ. இவர் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான கருத்துக்களை தெரிவித்து கடுமையான சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். அந்த வகையில் அவர் தற்போது பேசியுள்ள ஒரு விஷயம் அவரை கடும் இடரில் கொண்டுவந்து விட்டுள்ளது.



அதாவது, ஆண்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் பெண்கள் குளித்தால் அவர்கள் கர்ப்பமாக வாய்ப்பு இருப்பதாக பேசியதே அவரை தற்போது சர்ச்சையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இவரின் இந்த கருத்தை பெரும்பாலானவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள். மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு செய்தியை அதிகாரி ஒருவர் பொறுப்பில்லாமல் தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என்றும் அவரை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகாரிகளை கண்டித்து ஆளும் கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்! 

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
DMK councillor are protesting against officials in Gudiyatham section

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தலைமையில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கி ஒரு தலைபட்சமாக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

மன்ற கூட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் ஆளும்கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணிப்பு செய்து வெளியே வந்தனர். சில கவுன்சிலர்கள் ஆல்ரெடி பாய், தலைகானியோடு வந்திருந்தனர். அனைத்து கவுன்சிலர்களும் வெளியே வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வராண்டாவில் கறுப்பு பேட்ச் அணிந்துக்கொண்டு தரையில் பாய் போட்டு அமர்ந்து கொண்டு அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டம் நடந்த இடத்துக்கு வந்து ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் நடத்திய பேச்சுவார்த்தையில், மற்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செயல்படுவது போல் அனைவரையும் சமமாக கருத வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தின் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒதுக்குவது போல் கவுன்சிலர்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்றனர். அதிகாரிகளிடம் பேசுகிறேன் என்றனர். குடியாத்தம் நகர போலீசாரும் சமாதானம் பேசினர். இதனால் சமரசம் ஏற்பட்டு ஒன்றிய குழு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மாநிலத்தின் ஆளும்கட்சி திமுக, தொகுதி எம்.எல்.ஏ திமுக, ஒன்றியக்குழு தலைவர் திமுகவாக இருந்தாலும் இந்த ஒன்றிய அலுவலக நிர்வாகத்தை அதிமுக பிரமுகர்களே நடத்துகிறார்கள், இதற்கு சில திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆதரவாக இருக்கிறார்கள். அதிமுக பிரமுகர்கள் ஊராட்சி மனற் தலைவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். அதிகாரிகள் வழியாக அதிமுக பிரமுகர்கள் தங்களது தேவைகளான ஒப்பந்தம், பணிகள் போன்றவற்றை சாதித்துக்கொள்கிறார்கள். இது அடிக்கடி உள்ளுக்குள் நடந்த மோதல் இந்த பிரச்சனை குறித்து தெரிந்தும் வேலூர் மாவட்ட முக்கிய புள்ளிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் கவுன்சிலர்கள் வெளிப்படையாக போராட்டத்தில் குதித்துவிட்டார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த போராட்டத்தால் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Next Story

காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்து! ஆய்வில் அள்ளிய அதிகாரிகள்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Scam by relabeling expired pesticides medicines in Keeramangalam

 

காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள், நுண்ணூட்ட மருந்துகளை கொண்டு வந்து, புதிய லேபிள் மாற்றி மறுவிற்பனைக்கு அனுப்பி, விளைபொருட்களில் விஷம் கலக்கும் மிகப்பெரிய நெட்வொர்க் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலம் தெற்கு எழுமாங்கொல்லை கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் உள்ள ஒரு கொட்டகையில் பல வருடங்களுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வந்து புதிய லேபிள் ஒட்டி கீரமங்கலத்தில் உள்ள ஒரு மருந்துகடை மற்றும் மருந்துக்கடைகாரர் வீடுகளில் வைத்து புது அட்டைப் பெட்டிகளில் அடுக்கி புது மருந்தாக உள்ளூர் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கும், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி மொத்த மொத்தமாக ஒரு கும்பல் விற்பனை செய்வதாக வேளாண்துறை அதிகாரிகளிடம் நேரடியாக புகார் சொல்லியும் கண்டுகொள்ளாத நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு சில விவசாயிகள் தகவல் கொடுத்துள்ளனர்.

 

Scam by relabeling expired pesticides medicines in Keeramangalam

 

இந்த தகவலையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் பல நாட்கள் காலம் தாழ்த்தியுள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள் செவ்வாய் கிழமை வேளாண் உதவி இயக்குநர்கள் திருவரங்குளம் வெற்றிவேல், அறந்தாங்கி பத்மபிரியா ஆகியோர் தலைமையில் வேளாண் அலுவலர்கள் பாக்யா, புவனேஸ்வரி மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் அடங்கிய குழுவினர் முதல்கட்டமாக கீரமங்கலம் தெற்கு எழுமாங்கொல்லை கிராமத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்பவரின் தென்னந்தோப்பில் உள்ள கொட்டகையில் ஆய்வு செய்த போது 2013 முதல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை காலாவதியான நூற்றுக்கணக்கான பூச்சிக்கொல்லி, நுண்ணூட்ட மருந்து பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர். 

 

Scam by relabeling expired pesticides medicines in Keeramangalam

 

கீரமங்கலம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் இமானுவேல் முன்னிலையில் அனைத்து காலாவதியான மருந்துகளையும் கைப்பற்றி சாக்கு மூட்டையிலும் அட்டைப் பெட்டிகளிலும் அள்ளி கீரமங்கலம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்த தோட்ட உரிமையாளர் மாதவன், இந்த காலாவதியான மருந்துகளை குறைந்த விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு தெளிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து கீரமங்கலம் காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு பூட்டப்பட்டிருந்த மருந்துக்கடைக்கு சென்ற வேளாண்மை அதிகாரிகள் கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு கடையை சோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல உடல்நலமின்றி வெளியூரில் இருப்பதால் தற்போது வரமுடியாது என்று கடைக்காரர் கூறியுள்ளார். 

 

Scam by relabeling expired pesticides medicines in Keeramangalam

 

இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி வட்டாட்சியர் பெரியநாயகி, கீரமங்கலம் எஸ்.ஐ. குமரவேல் ஆகியோர் கடை மூடியிருப்பதைப் பார்த்து புதன் கிழமை கடையை திறந்து சோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதுவரை வேறு யாரும் கடையை திறக்காமல் இருக்க போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை கடைக்கு பாதுகாப்பு பணிக்கு நியமித்தனர். கடையை திறக்கும் போது உள்ளே காலாவதியான மருந்துகள் புது லேபிள் ஒட்டி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

Scam by relabeling expired pesticides medicines in Keeramangalam

 

புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், கீரமங்கலத்தில் நல்ல மருந்துகள் கிடைக்கும் என்று நம்பி பல கி.மீ கடந்து வந்து வாங்கிச் செல்வது வழக்கம். இப்போது காலாவதியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.