
ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் இருந்தும் பல்வேறு தலைவர்கள் இந்த விபத்து சம்பவத்திற்கு தங்களது வேதனைகளை தெரிவித்து வருகின்றனர். 'சோகமான தருணத்தில் இந்திய மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம்' என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா தெரிவித்துள்ளார். 'விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
'விபத்தில் உறவினர்களை பறிகொடுத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்' என துருக்கி வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. 'விலை மதிப்புமிக்க உயிர்கள் பறிபோன தகவல் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்' என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷடாஇரங்கல் தெரிவித்துள்ளார்.'இடையறாது பணியாற்றும் மீட்பு குழுவினருக்கு இதயப்பூர்வமான ஆதரவுகள்' என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 'விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறோம்' என இந்தியாவுக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 'உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' எனரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து வெளிநாட்டு தலைவர்களும் தூதரகங்களும் தங்களது இரங்கல் குறிப்புகளைவெளியிட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)