obama view on sonia making manmohan singh as pm of india

மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்ந்தெடுக்கும் சோனியா காந்தியின் முடிவு, ராகுல் காந்தியை கருத்தில் கொண்டே அமைந்திருந்தது என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

Advertisment

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமா “எ பிராமிஸ்ட் லேண்ட்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள், சந்தித்த மனிதர்கள், குடும்ப வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என பலவற்றை குறித்து இப்புத்தகத்தில் எழுதியுள்ள ஒபாமா, இந்திய அரசியல் குறித்தான தனது பார்வையையும் வெளிப்படுத்தியுள்ளார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து கூறியுள்ள அவர், "இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான பிரதான காரணமாக பிரதமர் மன்மோகன் இருந்தார். சீக்கிய மத சிறுபான்மையினரில் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தவர், ஊழல்குற்றச்சாட்டு இன்று நற்பெயரை சம்பாதித்து உள்ளார். மன்மோகன் சிங்கிற்கு தேசிய அளவில் எந்த விதமான அரசியல் பின்புலமும் கிடையாது என்பதும் அவரை பிரதமராக்கும் சோனியாவின் முடிவுக்கு காரணம். காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தகுதியானவராக ராகுலை வளர்க்கும் சோனியாவின் திட்டமும் மன்மோகனை தேர்வு செய்த முடிவின் பின்னால் இருந்தது.

Advertisment

மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தபோது, மன்மோகன் சிங் அதனை எதிர்த்தார். முஸ்லீம்-விரோத உணர்வு அதிகரித்து வருவது இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்துவதாக அவர் அஞ்சினார். இந்தியாவின் அரசியல் மதம், குலம் மற்றும் சாதியை சுற்றியே இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்த புத்தகத்தில் ராகுல் காந்தியை பற்றி கூறியிருந்த ஒபாமா, அவர் பக்குவப்படாதவர், பதற்றமானவர் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.