"என் மனைவி என்னைப் பிரிந்து சென்றுவிடுவார்" - அமைச்சரவை குறித்த கேள்விக்கு ஒபாமா பதில்...

obama clears about his position in cabinet

அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவ்வாறு நடந்தால், என் மனைவி என்னைப் பிரிந்து சென்றுவிடுவார் என ஒபாமா கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும், முறையாக அதிபர் மற்றும் துணை அதிபராக வரும் ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ளனர். இந்நிலையில், பைடனின் அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா என பைடனின் ஆதரவாளரும், முன்னாள் அதிபருமான ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "வெள்ளை மாளிகையில் பணியாற்றும் திட்டம் இப்போதைக்கு இல்லை. பைடனுக்கு எனது ஆலோசனை தேவைப்படாது. அவர் தனது அமைச்சரவையில் எனக்கு ஓரிடம் அளிக்கிறார் என்றால், அதில் நான் இடம் பெறமாட்டேன். ஒருவேளை பைடன் அமைச்சரவையில் சேர்ந்து விட்டால், எனது மனைவி மிச்செல் என்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவார்" என வேடிக்கையாகக்கூறியுள்ளார்.

Joe Biden obama
இதையும் படியுங்கள்
Subscribe