Skip to main content

ராகுல் காந்தி, மன்மோகன் சிங் குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ள ஒபாமா...

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

obama about rahul gandhi on his promised land book

 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தனது புதிய புத்தகம் ஒன்றில் ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் குறித்து எழுதியுள்ளார். 

 

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமா “எ பிராமிஸ்ட் லேண்ட்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதுகுறித்த விமர்சனம்  'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஒபாமாவின் இளமைக்கால வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, அதிபராக இருந்தபோது நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை விவரிக்கும் வகையிலான 768 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகம் வரும் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகத்தில், தான் அதிபராக இருந்தபோது சந்தித்த சர்வதேச தலைவர்கள் குறித்து ஒபாமா எழுதியுள்ளார். அதன்படி, ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங் குறித்தும் அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். 

 

மன்மோகன் சிங் குறித்துக் கூறியுள்ள அவர், "அமெரிக்க முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாப் கேட்ஸ், மன்மோகன் சிங் இருவரும் எளிதாக எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத தன்மையில் ஒற்றுமை இருப்பதைக் கண்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தி பற்றி கூறுகையில், "பதற்றமானவர், அறியப்படாத குணம் கொண்டவர். ஆசிரியரை ஈர்க்க நினைக்கும் மாணவரைப் போல் பாடங்களை நன்றாகப் படித்தாலும், திறமை படைத்தவராக இருந்தாலும், குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய நாட்டம் இல்லாதவராகவே இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் இந்த புத்தகத்தில் ரஷ்ய அதிபர் புதின், ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் குறித்து அவர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்