ஈரான் நாட்டு அணு விஞ்ஞானி பக்ரிசாதே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
தலைநகர் டெக்ரான் அருகே அவர் காரில் செல்லும் போது மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது. ஈரான் அணுக்குண்டு தந்தை என்று அவர் அழைக்கப்படுவார்.
Advertisment