(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2021-க்குள் அணுஆயுதங்களை ஒழிக்கவடகொரியா காலம் நிர்ணயத்துள்ளதாகதென்கொரியா அதிகாரிகள் தெரிவிக்க அதற்குடிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
சர்வேத அளவில் உற்றுநோக்கப்படும்சந்திப்பாக வடகொரியா அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு கடந்த ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த சந்திப்புஅணு ஆயுத ஒழிப்பை வடகொரியா செயல்படுத்த வேண்டும் என்ற சமரசத்திற்குவழிவகுப்பதாக கருதப்பட்டது.இந்த சந்திப்புக்கு பிறகு அணு ஆயுத ஒழிப்பு குறித்த எந்த தீர்க்கமான முடியும் எடுக்கப்படாத நிலையில் வடகொரிய அதிபர் கிம்தென்கொரிய அதிகாரிகளுடன் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். மேலும் இது தொடர்பான பேச்சுவார்த்தைவரும் 18 -ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 2021-ஆம் ஆண்டுக்குள்அணு ஆயுத ஒழிப்பை கொண்டுவர இருப்பதாக கிம் வெளிப்படுத்தியுள்ளார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.