Skip to main content

பிரிட்டனில் 2.55 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி

Published on 23/08/2020 | Edited on 23/08/2020
The nose glass of Mahatma Gandhi, which was auctioned for Rs 2.55 crore in Britain

 

மகாத்மா காந்தி அணிந்திருந்த மூக்கு கண்ணாடி 2 கோடியே 55 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.

1910-1930 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்த உரிமையாளர் ஒருவரின் மாமாவுக்கு இந்த மூக்கு கண்ணாடியை கொடுத்ததாக கூறப்படுகிறது. அரிதான இந்த தங்க முலாம் பூசப்பட்ட மூக்கு கண்ணாடியை தொடக்க விலையாக 65 ஆயிரம் பவுண்டுகள் என விலை நிர்ணயம் செய்து பிரிட்டனின் 'ஈஸ்ட் ப்ரிஸ்டல்' என்ற நிறுவனம் ஏலம் அறிவித்த நிலையில், தங்கமுலாம் பூசப்பட்ட காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடி 2 லட்சத்து 60 ஆயிரம் பிரிட்டன் பவுண்டுகளுக்கு ஏலம் போயுள்ளது. இந்திய மதிப்பில் 2 கோடியே 55 லட்சத்து 553 ரூபாய் ஆகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
King Charles of England has cancer

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு (வயது 73) புற்றுநோய் இருப்பது இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், நேற்று முதல் அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சைக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரோஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை (படங்கள்)

Published on 30/01/2024 | Edited on 30/01/2024

 

 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று (30-01-24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.