The nose glass of Mahatma Gandhi, which was auctioned for Rs 2.55 crore in Britain

Advertisment

மகாத்மா காந்தி அணிந்திருந்த மூக்கு கண்ணாடி 2 கோடியே 55 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.

1910-1930 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணிபுரிந்த உரிமையாளர் ஒருவரின் மாமாவுக்கு இந்த மூக்கு கண்ணாடியைகொடுத்ததாக கூறப்படுகிறது. அரிதான இந்த தங்க முலாம் பூசப்பட்ட மூக்கு கண்ணாடியைதொடக்க விலையாக 65 ஆயிரம் பவுண்டுகள் என விலை நிர்ணயம் செய்து பிரிட்டனின் 'ஈஸ்ட் ப்ரிஸ்டல்'என்ற நிறுவனம் ஏலம் அறிவித்தநிலையில், தங்கமுலாம் பூசப்பட்ட காந்தியடிகளின் மூக்குக் கண்ணாடி 2 லட்சத்து 60 ஆயிரம் பிரிட்டன் பவுண்டுகளுக்கு ஏலம் போயுள்ளது. இந்திய மதிப்பில் 2 கோடியே 55 லட்சத்து 553 ரூபாய் ஆகும்.